
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : வாதானுார் அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். ஆசிரியை ரேணு வரவேற்றார். ஆசிரியர் பாலகுமார் ஒங்கிணைத்தார்.
கண்காட்சியில், மாணவர்களின் மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு, பிளாஸ்டிக் பாட்டிலை கொண்டு டைனோசர் உருவத்தை காட்சிப்படுத்தியது பார்வை யாளர்களை கவர்ந்தது.
இதில், தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை என மாணவர்களின் 200க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.