
புதுச்சேரி : பூரணாங்குப்பம், அரசு நடுநிலைப் பள்ளியில் அறி வியல் கண்காட்சி நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியர் சகாயமேரி பாத்திமா தலைமை தாங்கினார். கண்காட்சியை, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் செல்வராஜ், மதியழகன் திறந்து வைத்தனர்.
கண்காட்சியில் நீர் சேமிப்பு, தட்பவெப்ப நிலை, சூரிய குடும்பம், காலநிலை மாற்றங்கள், விவசாயம், உணவே மருந்து, பகல் நேர வானவியல், சந்திராயன் ஆகிய தலைப்புகளில், படைப்புகள் இடம் பெற்றன.
மேலும் சூரிய குடும்பம் குறித்து மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.இந்தாண்டு சர்வதேச ஒட்டக ஆண்டு என்பதால், அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரம்மாண்டமான பதாகைகள், முப்பரிமாணம் மாதிரிகள் கண்காட்சியில் இடம் பெற்றன.
கண்காட்சியை புதுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். 125க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
ஏற்பாடுகளை ஆசிரியர் கள் அரவிந்தராஜா, மேகலா தேவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.