
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.
தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கி, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். மூத்த ஆசிரியை லட்சுமி முன்னிலை வகித்தார். அறிவியல் ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார்.
கண்காட்சியில், மாணவ, மாணவிகளின் 140க்கு மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், ஆயுர்வேத மருத்துவர் காங்கேயன் ஏற்பாட்டில் மூலிகை தாவரத்தின் முக்கியத்துவம், ஆசிரியர் சூரியகுமாரி ஏற்பாட்டில் டெங்கு விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாணிக்கவேல், இளவரசி, பள்ளி நுாலகர் லட்சுமணன், கணினி பயிற்றுநர் மதுபாலன், அலுவலக ஊழியர் மாவீரன் மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர் சடகோபன் நன்றி கூறினார்.