
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் திரு.வி.க. அரசு உயர்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
பள்ளியின்தலைமை ஆசிரியர் வாசு தலைமை தாங்கி, கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில், பள்ளி மாணவ, மாணவியர்களின் 180க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில், அறிவியல் ஆசிரியர்கள் ஜெகதீஸ்வரி, கோமதி, பொருப்பாசிரியர்கள் சுரேஷ், சுகிலீலா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஸ்ரீதேவி, வெள்ளத்துரை மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.