
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
துவக்க விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருவரசன்தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் தணிகாசலம் வரவேற்றார்.
கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் மோகன் கண்காட்சி அரங்கை திறந்துவைத்து பார்வையிட்டார். அறிவியல் ஆசிரியை திருமங்கை நோக்க உரையாற்றினார்.
அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் சார்பில் 150க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றது.
சிறந்த படைப்புகளைவிவேகானந்தா அரசுப் பள்ளி வேதியியல் துறை விரிவுரையாளர் முரளி, கூடப்பாக்கம் அரசுப் பள்ளி விலங்கியல் துறை விரிவுரையாளர் இளங்கோ ஆகியோர் தேர்வு செய்து பரிசுகளை வழங்கினர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சரவணன், ரவி, திருமாவளவன், சுரேஷ் உட்பட பலர் செய்தனர். ஆசிரியர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.