
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளியின் முதல்வர் சாய்வர்கீஸ் கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டார். இதில், உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளை மாணவிகளின் பல்வேறு அறிவியல் படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டன.
தலைமை ஆசிரியை இக்னேஷியஸ் மேரி சபீனா முன்னிலை வகித்தார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் விரிவுரையாளர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இதில், ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.