
நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் அருணை ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கைவினை கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்க துணை தலைவர் அழகேசன், பொருளாளர் மோகன்தாஸ், இணை பொருளாளர் மாணிக்கம், பள்ளி முதல்வர் சந்தானம் ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்காட்சியில் பள்ளி மாணவர்களின் நுாற்றுாக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. குறிப்பாக மருத்துவ தாவரங்கள், ரோபோக்கள், ராக்கெட் லான்ஞ்சர், பாரம்பரிய உணவு வகைகள், 3டி தொழில்நுட்ப பொருட்கள், ஜி.எஸ்.எல்.வி., மாதிரி ஏவுகணை ஆகிய படைப்புகள் கண்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.
சிறந்த படைப்புகள் வழங்கிய மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் சந்தானம் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். கண்காட்சியை பெற்றோர்கள், மாணவர்கள் பார்வையிட்டனர்.
ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் கலைவேந்தன், மேலாளர் தமிழ்சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.