/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
விவேகானந்தா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 15, 2024 04:17 AM

புதுச்சேரி: விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது.
புதுச்சேரி செல்லப்பெருமாள் பேட்டை, விவேகானந்த மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் ஓவியம், கைவினைப் பொருட்கள் காண்காட்சி துவக்க விழா நடந்தது. பள்ளி முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். கண்காட்சியில், எல்.கே.ஜி., முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 65 அறிவியல் படைப்புகள், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் 400 படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. மாதிரி படைப்புகளின் இயக்க முறை பற்றியும், அவற்றை நடைமுறையில் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, ஓவியம், மற்றும் கைவினை பொருட்கள், மாணவர்களின் படைப்புகள் பார்வையார்களை கவர்ந்தது.