
வில்லியனுார்; புளு ஸ்டார் ஆங்கில பள்ளியில் அறிவியல் கண்காட்சியை சிவசங்கரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சி துவக்க விழாவிற்கு பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வரலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சிவசங்கரன் எம்.எல்.ஏ., பங்கேற்று அறிவியல் கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் சார்பில், 178 அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. இரண்டு நாட்கள் நடந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
நிறைவு நாள் நிகழ்ச்சியாக கண்காட்சியில் சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்து, மாணவர்களுக்கு பள்ளி துணை முதல்வர் சாலை சிவசெல்வம் மற்றும் பள்ளி நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகளை வழங்கி, பாராட்டினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள், தேசிய மாணவர் படையினர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்தனர்.