நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் ஆங்கிலஸ் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளிக்கல்வி துணை இயக்குனர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். துணை ஆய்வாளர் செல்வி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
கண்காட்சியில், மாணவர்களின் 300க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றன.
ஓய்வு பெற்ற விரிவுரையாளர்கள் அருணகிரி, கணேசன், மரியா ராஜ்குமார் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.

