தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசளிப்பு

அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசளிப்பு

அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசளிப்பு


UPDATED : அக் 08, 2026 04:28 PM

ADDED : அக் 08, 2026 04:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 04:28 PM ADDED : அக் 08, 2026 04:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வாதானுார், அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ரேணு வரவேற்றார். ஆசிரியர் பாலகுமார், நவீன உலகில் அறிவியலின் வளர்ச்சியும், மாணவர்களின் பங்கு குறித்து நோக்கவுரையாற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார்.

அறிவியல் கண்காட்சியில் தொடக்க நிலை, நடுநிலை மற்றும் உயர்நிலை என மாணவர்கள் சாலை போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒலி மாசுபாடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், மின் விபத்தை தடுக்கும் கருவி, வெள்ள அபாயஒலி எழுப்பும் கருவி உட்பட 200க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.முன்னாள் ராணுவ வீரர் ஆளவந்தான் வாழ்த்தி பேசினார்.

சென்ட்ரல் பங்க் ஆப் இந்தியா மேலாளர் வெங்கடேஸ்வரன், உதவி மேலாளர் மாதேஸ்வரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரிஷிகேஷ் பரந்த் ஆகியோர் கண்காட்சியில் மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

ஆசிரியர் சபரிநாதன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, வேலவன், புளோரன்ஸியா, நித்திலவல்லி, ஸ்ரீமதி, விஸ்வ பிரியா, சுகந்தி, பூவிழி, சங்கரி, ஓம் சாந்தி, சுஜாதா, மகேஸ்வரி, ஆஷா நந்தினி, அகல்யா, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us