நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: துாய்மை பணியாளரின் பைக்கை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் சுப்ரமணியின் மகன் சிவக்கொழுந்து,27; புதுச்சேரி ஏர்போர்டில் தனியார் வசம் உள்ள பிரிவில், துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 7ம் தேதி தனது சகோதரியின் ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றார். அன்று இரவு 8:30 மணிக்கு குயவர் காலனிக்கு செல்லும் வழியில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு நண்பரை பார்க்க சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.