நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, மூலக்குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மேனகா, 43; முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் தனது ஸ்கூட்டியை மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு, தனியார் பஸ் மூலம் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
மேனகா கடந்த மாதம் 19ம் தேதி வழக்கம்போல், தனது ஸ்கூட்டியை மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டியை காணவில்லை. மேனகா அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.