ADDED : ஜன 29, 2025 05:40 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு கல்வித்துறை பாரத சாரணர் இயக்கம் மூலம் இரண்டு நாள் சாரணர் பயிற்சி முகாம் பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
முகாமினை, பள்ளியின் தலைமையாசிரியர் சகாயமேரி பாத்திமா துவக்கி வைத்தார். முதல் நாள் முகாமில், சாரண ஆசிரியர்கள் மனோகர், அந்தோணி, மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சாரணர் இயக்கம் குறித்து அடிப்படை தகவல்கள், அணிமுறை, முடிச்சுகள் அதன் பயன்கள் குறித்து பயிற்சி அளித்தனர். இரண்டாம் நாள் முகாமில் சாரண ஆசிரியர் அரவிந்தராஜா சாரணர்களுக்கு பள்ளி அருகில் உள்ள பச்சைக்குளத்தின் பல்லுயிர் பெருக்க விவரங்கள் குறித்தும், தொலைநோக்கி வடிவமைப்பது குறித்தும், இரவில் வான் நோக்கு நிகழ்ச்சியின் பொழுது கோள்களின் சீரமைப்பு குறித்தும் விளக்கினார். பேரிடர் மேலாண்மை, தீயணைப்பான்களின் பயன்கள் கையாளும் முறை குறித்த செயல் விளக்கம் அளித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு சாரணர் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை சாரண ஆசிரியர் அரவிந்தராஜா உட்பட பலர் செய்திருந்தனர்.