ADDED : ஜன 13, 2024 07:16 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாரணியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமினை பள்ளி முதல்வர் சாய் வர்கீஸ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியை இக்னீஷியஸ் மேரி சபீனா, பொறுப்பாசிரியை தனலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓவிய ஆசிரியர் சண்முகம், மாவட்ட அமைப்பு ஆணையர் லதா, சாரண ஆசிரியர் மனோகர், மாவட்ட அமைப்பு ஆணையர் சரவணகுமார், சாரண ஆசிரியர்கள் விக்டோரியன் விஜய், கண்ணப்பன், மாநில பயிற்சி ஆணையர் முருகையன் ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்தனர்.
நிறைவு விழாவில், சாரண இயக்கம் மாநில அமைப்பு ஆணையர் சண்முகம் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இணைச்செயலாளர் துரை ராமலிங்கம், மாவட்ட அமைப்பு ஆணையர் அந்தோணிசாமி, பள்ளி ஆசிரியர்கள் உஷாராணி, பாலசுந்தரி, சரஸ்வதி, கவிதா, துர்கா, கார்த்திகேயன், முகுந்தன், திருச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.