sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு.. இன்று முடிவு நள்ளிரவு வரை என்.ஆர்.காங்., ஆலோசனை

/

தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு.. இன்று முடிவு நள்ளிரவு வரை என்.ஆர்.காங்., ஆலோசனை

தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு.. இன்று முடிவு நள்ளிரவு வரை என்.ஆர்.காங்., ஆலோசனை

தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு.. இன்று முடிவு நள்ளிரவு வரை என்.ஆர்.காங்., ஆலோசனை


ADDED : மார் 13, 2026 06:20 AM

Google News

ADDED : மார் 13, 2026 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்று முடிவு செய்யப்படவுள்ளது. தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதற்காக, என்.ஆர்.காங்., கட்சி நேற்று நள்ளிரவு வரை தீவிர ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,-பா.ஜ., (தே.ஜ.,) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதனையொட்டி சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாக உள்ளது.

தற்போதுள்ள தே.ஜ., கூட்டணி எதிர் வரும் சட்டசபை தேர்தலில் தொடர்வது கடந்த மாதம் மத்திய உள்துறை அமித்ஷா காரைக்கால் வருகையின் போது உறுதியானது. அதனைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ரூ.2,714 கோடி மதிப்பில் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த இரு வாரமாக அரசு சார்பில் தினசரி தொகுதி தோறும் வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்டங்கள் துவக்க விழாக்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், தேர்தல் பணிகளிலும் தே.ஜ., கூட்டணி கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தே.ஜ., கூட்டணி உறுதியான போதிலும், தொகுதி பங்கீடு இதுவரை நடைபெறவில்லை. இதனால், எந்த தொகுதி யாருக்கு என்பது தெரியாததால், தேர்தல் பணியை துவங்குவதில் தாமதமாகி வருகிறது. ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அதற்குள்ளாக தொகுதி பங்கீட்டை முடிக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.

இன்று வருகை: இதற்காக, பா.ஜ., மாநில தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மாலை புதுச்சேரி வருகிறார். அவர், முதல் கட்டமாக பா.ஜ.,வினருடன் ஆலோசனை நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து என்.ஆர்.காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்பட உள்ளது.

என்.ஆர்.காங்., ஆலோசனை

அதனையொட்டி, என்.ஆர்.காங்., கட்சி சார்பில் இன்று நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகும் பொருட்டு நேற்று இரவு காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், எத்தனை தொகுதியை கூட்டணியில் பெறுவது. எந்தந்த தொகுதியை கட்சிக்கு பெறுவது. வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கூட்டணி கட்சிகளுக்குள் பேச்சுவார்த்தை நடத்த கட்சியில் குழு அமைப்பது மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. .

அதில், தே.ஜ., கூட்டணியில் என்.ஆர்.காங்., 16 தொகுதிகளும், மீதமுள்ள 14 தொகுதிகள் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கீட்டு கொள்வது என உறுதி செய்தபோதிலும், என்.ஆர்.காங்.,- பா.ஜ., கட்சிகளுக்குள் சில தொகுதிகளில் உரசல் நிலவி வருகிறது.

குறிப்பாக லாஸ்பேட்டை, ராஜ்பவன், திருபுவனை உள்ளிட்ட தொகுதிகளை இரு கட்சிகளும் கேட்பது போன்ற சிறு, சிறு பிரச்னைகளுக்கு சமூக தீர்வு எட்டப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us