/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரண்டாவது உலக திரைப்பட விழா புதுச்சேரியில் இன்று துவக்கம்
/
இரண்டாவது உலக திரைப்பட விழா புதுச்சேரியில் இன்று துவக்கம்
இரண்டாவது உலக திரைப்பட விழா புதுச்சேரியில் இன்று துவக்கம்
இரண்டாவது உலக திரைப்பட விழா புதுச்சேரியில் இன்று துவக்கம்
ADDED : ஆக 08, 2025 02:19 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 2வது உலக திரைப்பட விழா 2025 இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்ககிறது.
இது குறித்து புதுச்சேரி திரை இயக்க செயலாளர் பச்சையம்மாள் கூறியதாவது:
புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து 2வது உலக திரைப்பட விழா 2025 இன்று, நாளை மற்றும் 10ம் தேதி என, மூன்று நாட்கள் நடத்துகிறது.
விழா, புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் இன்று மாலை 5:30 மணிக்கு துவங்கவுள்ளது. விழாவை, சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் துவக்கி வைக்கிறார். இதில், பிரான்ஸ், ஸ்பெய்ன், பிரிட்டன், ஈரான், அர்ஜென்டினா, அமெரிக்கா மொழி திரைப்படங்களோடு, இந்திய படமும் திரையிடப்படவுள்ளது.
இயக்குனர் சிவக்குமார் மோகனன் ஒருங்கிணைக்கும் சிறப்பு வகுப்பு நாளை பகல் 12:00 மணிக்கு நடக்கிறது. இதில், திரைவிமர்சனங்கள், கருத்தரங்குகள் நடக்கவுள்ளது. விழாவில், அமைச்சர் லட்சுமி நாராயணன், அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் நலம் சதீஷ், திரை இயக்க செயலாளர் பச்சையம்மாள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை புதுச்சேரி திரை இயக்க நிர்வாகிகள், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்' என்றார்.

