/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வித்தியாசம் இன்றி மதுபான ஆலைக்கு ரகசிய அனுமதி
/
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வித்தியாசம் இன்றி மதுபான ஆலைக்கு ரகசிய அனுமதி
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வித்தியாசம் இன்றி மதுபான ஆலைக்கு ரகசிய அனுமதி
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வித்தியாசம் இன்றி மதுபான ஆலைக்கு ரகசிய அனுமதி
ADDED : ஜன 22, 2025 07:18 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 8 மதுபான ஆலை அனுமதிக்கு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் இன்றி ரகசிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழத்தில் தாக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்டு மகிளா காங்., சார்பில், நடந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது;
புதுச்சேரியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல்கலைக் கழகத்தில் வெளிநபர்கள் உள்ளே வந்து மாணவியிடம் அத்துமீறி உள்ளனர். பல்கலைக் கழக நிர்வாகம் மீது வழக்கு பதிய வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியை புகார் கொடுக்க வேண்டாம் என மிரட்டி உள்ளனர். இதில் அரசியல் தலையீடு உள்ளது. தொழில்நுட்ப பல்கலை மாணவி விவகாரத்தை என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு மூடி மறைக்கிறது.
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தபோது, பா.ஜ., தலைவர் அண்ணாமலை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தன்னை தானே சவுக்கால் அடித்து கொண்டார். புதுச்சேரி சம்பவத்தை கண்டித்து அவர், சவுக்கால் அடித்துக் கொள்வாரா. தமிழகத்திற்கு ஒரு நீதி, புதுச்சேரிக்கு ஒரு நீதியா?பெண் வன்கொடுமை பற்றி பேச பா.ஜ.வுக்கு உரிமை இல்லை.
முதல்வர் ரங்கசாமிக்குஎதைப் பற்றியும் கவலையில்லை. 15 லட்சம் மக்கள் தொகையில் 7.5 லட்சம் பேருக்கு முதல்வர் ரங்கசாமி மதுபான கடைக்கு அனுமதி வழங்க போகிறார்.புதுச்சேரியில் 6 மதுபான ஆலைகள் உள்ளது. இன்னும் 8 ஆலைகள் துவக்க அனுமதி வழங்க போகிறார்.
சங்கராபரணி ஆற்றுக்கு பதிலாக சாராய ஆறு ஓட வைக்க ரங்கசாமி நினைக்கிறார். 8 மதுபான ஆலை அனுமதிக்கு ஏலம் விடவில்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என வித்தியாசமின்றி ரகசிய அனுமதி வழங்கி உள்ளனர். மதுபான ஆலைக்கு அனுமதி அளித்தால் கவர்னர் மீதும் வழக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.