/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதுகாப்பான இணைய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பாதுகாப்பான இணைய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 14, 2025 04:43 AM

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பான இணைய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாநில தகவலியல் அதிகாரி கோபி சுவாமிநாதன் வரவேற்றார்.தகவல் தொழில்நுட்ப செயலாளர் முத்தம்மா தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் உதயசங்கர், சைபர் கிரைம் போலீஸ் எஸ்.பி., பாஸ்கரன், தேசிய தகவலியல் மையத்தின் இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவம், அதன் நடைமுறைகள் மற்றும் தற்போதைய சவால்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதேபோல், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பான இணைய வழி மாவட்டங்களில், பாதுகாப்பான இணைய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிகளில், அரசு அலுவலகங்களில் இணைய சேவைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இணையத்தில் தற்போதைய சவால்கள் மற்றும் புதிய பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

