/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாசி மக தீர்த்தவாரி பாதுகாப்பு ஏற்பாடு : அதிகாரிகள் ஆலோசனை
/
மாசி மக தீர்த்தவாரி பாதுகாப்பு ஏற்பாடு : அதிகாரிகள் ஆலோசனை
மாசி மக தீர்த்தவாரி பாதுகாப்பு ஏற்பாடு : அதிகாரிகள் ஆலோசனை
மாசி மக தீர்த்தவாரி பாதுகாப்பு ஏற்பாடு : அதிகாரிகள் ஆலோசனை
ADDED : பிப் 17, 2026 05:46 AM

புதுச்சேரி: மாசி மக தீர்த்தவாரி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, கலெக்டர் தலைமையில் அனைத்து தறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் வரும் 2ம் தேதியும், வைத்திக்குப்பம் மற்றும் வீராம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் வரும் 3ம் தேதியும், மாசி மக தீர்த்தவாரி திருவிழா நடைபெற உள்ளது.
இது தொடர்பான, ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், எஸ்.பி.,க்கள், பயிற்சி கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில்'' தீர்த்தவாரி பாதுகாப்பு பணியில் பயிற்சி பெற்ற மீனவர்கள் மற்றும் தன்னார்வளர்களை கூடுதலாக அமர்த்திட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். சாலையில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பள்ளங்களை சரி செய்து, சாலைகளையும் சுத்தம் செய்து பராமரித்திட வேண்டும். மொபைல் டாய்லெட் வசதி, குடிநீர் வசதி, கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். சுகாதார துறை மூலம் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

