/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மயங்கி விழுந்து செக்யூரிட்டி சாவு
/
மயங்கி விழுந்து செக்யூரிட்டி சாவு
ADDED : பிப் 08, 2025 06:13 AM
பாகூர்: தனியார் நிறுவன செக்யூரிட்டி மயங்கி விழுந்து இறந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் ரெட்டிச்சாவடி அடுத்து பூசாரிப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன், 52; இவர், காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், செக்யூரிட்டி வேலை செய்துவந்தார். நேற்று முன்தினம் இரவு, பணியில் இருந்தபோது, திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அவரை அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார்.
இந்நிலையில், அவரது மனைவி பாக்கியலட்சுமி, 41; தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்.