/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேலியமேட்டில் 1ம் தேதி செடல், தேர் திருவிழா
/
சேலியமேட்டில் 1ம் தேதி செடல், தேர் திருவிழா
ADDED : ஜூலை 29, 2025 07:31 AM

பாகூர் : பாகூர் அடுத்துள்ள சேலியமேட்டில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டு தோறும் 10 நாட்கள் ஆடி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகளும், இரவு வீதியுலாவும் நடந்து வருகிறது. 4ம் நாள், யாதவர் உற்சவத்தில், காமதேனு வானத்தில் சுவாமி வீதியுலா சென்று அருள் பாலித்தார். விழாவின், முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேர் திருவிழா வரும் 1ம் தேதி மாலை 4.00 மணிக்கு நடக்கிறது.
ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன், மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.