/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதை நெல் உற்பத்தி செயல்முறை பயிற்சி
/
விதை நெல் உற்பத்தி செயல்முறை பயிற்சி
ADDED : ஆக 20, 2025 11:52 PM

வில்லியனுார் : வேளாண் துறை சார்பில், உறுவையாறு செல்வா நகரில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில் விதைநெல் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
விதை சான்றிதழ் முகமையின் தலைமை விதை சான்று அதிகாரி சிவசங்கரமுருகன் தலைமை தாங்கி, பேசினார்.
காரைக்கால் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விதை தொழில்நுட்ப துறை தலைமை பேராசிரியர் ராமநாதன் விதை உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து பேசினார்.
தமிழ்நாடு விதை சான்றளிப்பு அதிகாரி கனகராஜ் நெற்பயிரில்செயல்முறை குறித்தும், மண் ஆய்வு கூடம், துணை வேளாண் இயக்குனர் சிவசுப்ரமணியன்விதை உற்பத்தியில் மண் வளம் பாதுகாப்பு குறித்து பேசினார்.
முகாமில், வில்லியனுார் கோட்டத்திற்கு உட்பட்ட வில்லியனுார், அரியூர்,திருக்காஞ்சி, ஒதியம்பட்டு, கூடப்பாக்கம், தொண்டமாநத்தம் உழவர் உதவியகத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன், ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் மற்றும் விரிவாக்க பயனாயளர்கள் செய்தனர்.விதை சான்றொப்பு அதிகாரி தியாகராஜன் நன்றி கூறினார்.