ADDED : அக் 21, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெரியக்கடை பகுதியில் குட்கா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு செஞ்சி சாலை சந்திப்பில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
லாஸ்பேட்டை, பெத்துசெட்டிபேட், பாவேந்தர் வீதியை சேர்ந்த சுந்தரி, 57; என்பவரது டீக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையில் இருந்த ரூ.1,000 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.