ADDED : பிப் 21, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை பகுதியில் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட மேரி உழவர்கரை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அய்யங்குட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன், 51; என்பவரது கடையில் தடை செய்யப்பட்டப்பட்ட 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதையடுத்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், முருகன் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.