ADDED : பிப் 14, 2026 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சிநிறைவு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார்.
சமூக ஆர்வலர் ஆளவந்தார் வாழ்த்தி பேசினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவிகள், செயல் விளக்கம் அளித்து பாராட்டுகளை பெற்றனர்.
பயிற்சி அளித்த பிளாக் பெல்ட் சுஜிதாவிற்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் ரேணு நன்றி கூறினார்.

