/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேலியமேடு கோவில் திருவிழா துவக்கம்
/
சேலியமேடு கோவில் திருவிழா துவக்கம்
ADDED : ஜூலை 26, 2025 08:17 AM
பாகூர் : பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தில் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் மற்றும் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது.
இதையொட்டி, காலை 9:00 மணிக்கு கரகம் வீதியுலா, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு 8:00 மணிக்கு கும்பம் கொட்டி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில், தினமும் காமதேனு, சிங்கம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேர் திருவிழா வரும் 1ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடக்கிறது.
இதில், முதல்வர் ரங்கசாமி, துணை சபாநாயர் ராஜவேலு, லட்சுமி காந்தன் எம்.எல் .ஏ., உள்ளிட்டோர் பங்கேற்று, தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன், விழாக்குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வரு கின்றனர்.