/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது நாடக அரசியல் எதிர்க்கட்சிகளுக்கு செல்வகணபதி எம்.பி., கண்டனம்

ADDED : அக் 18, 2024 06:07 AM
புதுச்சேரி: எதிர்க்கட்சிகள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது நாடக அரசியல் என, பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி இந்திரா சிலை அருகே சந்திரன் என்பவரது, பங்க் கடைக்கு சென்ற சிலர் அவரை தாக்கினர். இப்பிரச்னையை காங்., மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு அரசியல் லாபத்துக்கு அறுவடை செய்ய பார்க்கின்றனர்.
பாதிக்கப்பட்டவரை ஸ்டெச்சரில் கவர்னர் மாளிகைக்கு கொண்டு சென்று முற்றுகைப் போராட்டம் நடத்துவது அவசியமற்றது. கவர்னரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையின் தரம், சிகிச்சை சரியில்லை என நேரு எம்.எல்.ஏ. பேசுவது சரியில்லை.
என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசை சில அமைப்புகளுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் துாண்டுதலில் நேரு எம்.எல்.ஏ., கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு அரசியல் செய்திருக்கிறார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி இந்த சம்பவத்தை பெரிதாக்கி அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறார்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கும். இப்பிரச்னையில் கவர்னருக்கு தொடர்பு இல்லாத நிலையில், அவருடைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திருப்பது நாடக அரசியல்' என்றார்.