நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், நல்வாழ்வு மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு, பள்ளி தலைமையாசிரியர் கோமதி தலைமை தாங்கினார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்கரதேவி நோக்கவுரை கூறினார். கணித பட்டதாரி ஆசிரியர் லலிதா 'மாதவிடாய் காலத்தில் மாணவிகள் சுகாதாரமாக இருக்க வேண்டிய முறைகள் மற்றும் பாதுகாப்பான நலவாழ்வு குறித்துக் கருத்துரையாற்றினார்.
நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

