/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலாஜி வித்யாபீத் பல்கலையில் கருத்தரங்கு
/
பாலாஜி வித்யாபீத் பல்கலையில் கருத்தரங்கு
ADDED : ஏப் 30, 2025 12:19 AM

பாகூர் : பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்லைக்கழகத்தில், படைப்பாற்றல், கலை சிகிச்சை வளங்களை உருவாக்கும் முயற்சிக்கான கருத்தரங்கம் நடந்தது.
உலக இசை மருத்துவ வாரத்தை முன்னிட்டு, ஸ்கூல் ஆப் மியூசிக் தெரபி, இன்ஸ்டிடியூட் ஆப் சலுாடோஜெனிசிஸ் அண்ட் காம்பிளிமெண்டரி மெடிசின், ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர் நிலை பல்கலைக்கழகம், லண்டன் ஆங்க்லியா ரஸ்கின் பல்கலைக்கழகம், ஆரோவில் ஸ்வரம், மற்றும் புதுச்சேரி ஆனந்த ஆசிரமம் ஆகியவை இணைந்து படைப்பாற்றல் கலை சிகிச்சை வளங்கைளை உருவாக்கும் முயற்சிக்கான கருத்தரங்கம் நடந்தது.
பல்கலைக்கழக துணை வேந்தர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ் ஆதரவுடன் நடந்த நிகழ்ச்சியை, ஸ்கூல் ஆப் மியூசிக் தெரபி நிர்வாக பொறுப்பாளர் ஆனந்த பாலயோகி பவனானி, இன்ஸ்டிடியூட் ஆப் சலுாடோஜெனிசிஸ் அண்ட் காம்பிளிமெண்டரி மெடிசின் இயக்குநர் சோபனா ஆகியோர் வழிநடத்தினர்.
இதில், இசை மருத்துவம் மற்றும் பிற படைப்பாற்றல் கலை சிகிச்சைகளை ஒருங்கிணைக்கும் முறைகள், சுகாதாரத் துறையில் மாற்று மற்றும் கூடுதல் சிகிச்சைகளை பற்றி விழிப்புணர்வு உருவாக்குவது, கலை சிகிச்சைகள் மனித உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதில் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து கருத்துரையாற்றினர்.
இந்நிகழ்சியில், இசைக்கலைஞர்கள், மனவியல் நிபுணர்கள், மைண்ட் பாடி மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், இசை மருத்துவ நிபுணர்கள், சிறப்பு கல்வியாளர்கள், இசை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

