/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காஞ்சி மாமுனிவர் கல்லுாரியில் கருத்தரங்கு
/
காஞ்சி மாமுனிவர் கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : அக் 30, 2025 07:29 AM

புதுச்சேரி:  லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் முதுநிலைப் பட்டப்படிப்பு கல்லுாரியில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.
மனையியல் துறை சார்பில், 'கருவிகள் மற்றும் தொழில் நுட்பம் குறைத்தல், மீண்டும் பயன்படுத்தல், மறு சுழற்சி செய்தல் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் ரஜினி வரவேற்றார். கல்லுாரி இயக்குனர் கோச்சடை, மாநாட்டை துவக்கி வைத்தார்.
பேராசிரியர் அலமேலுமங்கை நோக்கவுரையாற்றினர். பேராசிரியர் இளங்கோவன், கல்வி அமைச்சர் நமச்சிவாயத்தின் தனிச் செயலர் பாலாஜி வாழ்த்திப் பேசினார்.
புதுச்சேரி பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் சாந்தி சிறப்புரையாற்றினார். தொழில்நுட்ப கல்வி மாநில பொறுப்பாளர் அசோக் துவக்க உரையாற்றினார். முதல்நாள் மாநாட்டில் பேராசிரியர்கள் சாந்தி, நந்திவர்மன், புபேஷ் குப்தா, ரமேஷ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
இரண்டாம் நாள் மாநாட்டில் உமாபதி, கஜலட்சுமி ஆகியோர் மாசு தடுப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு உத்திகள் குறித்து பேசினர்.

