/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவ கல்லுாரியில் கருத்தரங்கம் துவங்கியது
/
அரசு மருத்துவ கல்லுாரியில் கருத்தரங்கம் துவங்கியது
அரசு மருத்துவ கல்லுாரியில் கருத்தரங்கம் துவங்கியது
அரசு மருத்துவ கல்லுாரியில் கருத்தரங்கம் துவங்கியது
ADDED : செப் 03, 2025 08:59 AM

புதுச்சேரி; புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் இரண்டு நாள் பயிற்சி கருந்தரங்கம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் நேற்று துவங்கியது.
கருத்தரங்கை சுகாதார துறை இயக்குநர் செவ்வேள் துவக்கி வைத்தார்.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மூத்த ஆலோசகர் புரோச்சி சிங், திட்டப்பணி தலைவர் ராகுல் யாதவ் ஆகியோர் கர்ப்பகால பராமரிப்பு மற்றும் குழந்தை ஆரோக்கியம் குறித்து விளக்கம் அளித்தனர்.
மாநில சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு அதிகாரி சந்திர மோகன், ஆர்.சி.எச். செயலியின் பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தார்.
கருத்தரங்கில், கர்ப்பிணி பெண்கள் பதிவு செ ய்வது முதல் பிரசவ காலம், குழந்தை பராமரிப்பு, பிரசவ பின்கால கண்காணிப்பு, கருத்தடை சாதனம் உபயோ கிப்பு, பிறந்த குழந்தைகளை 2 ஆண்டுகள் வரை வீட்டில் சென்று கண்காணிப்பது உள்ளிட்ட வற்றை மத்திய அரசின் ஆர்.சி.எச். (கர்ப்ப கால பராமரிப்பு மற்றும் குழந்தை ஆரோக்கியம்) - 2.0 திட்டத்தின் செயலி மூலம் கணினி முறையில் பதிவு செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த செயலியில் பதிவு செய்வதன் மூலம் சேவைகளை தொடர்ந்து கண்காணித்து, கவனம் செலுத்துவதால் தாய் மற்றும் குழந்தை இறப்புகளை குறைக்க முடியும்.
கருத்தரங்கில் காரைக்கால், ஏனாம் பிராந்திய துணை இயக்குநர்கள், தரவு மேலாளர்கள் மற்றும் புதுச்சேரி ஆரம்ப சுகாதார மையத்தின் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குடும்ப நலத்துறை துணை இயக்குநர் ஆனந்தலட்சுமி செய்திருந்தார்.