/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு
/
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு
ADDED : அக் 30, 2024 04:19 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணைய வழியில் பயன்பெறுவது தொடர்பான கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இணைய வழி வர்த்தக முறைகளை பின்பற்றி ஏற்றுமதி வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது குறித்த கருத்தரங்கு, சாரம், தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.
இதில் சென்னை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன உதவி இயக்குநர் ரெட்டி வரவேற்றார்.
புதுச்சேரி இணை இயக்குநர் தர்ம செல்வன், லகு உதியோக் பாரதி அமைப்பின் பொதுச் செயலாளர் விஷ்வேஷ்வரன், வெளிநாட்டு வர்த்தக துறை கூடுதல் இயக்குநர் இனிதா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சென்னை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன இணை இயக்குநர் சுரேஷ் பாபுஜி குறிப்புரை வழங்கினார்.
புதுச்சேரி தொழில் வர்த்தகத்துறை இயக்குநர் ருத்ர கவுடு தலைமை உரையாற்றினார்.
சென்னை உதவி இயக்குநர் கிரண்தேவ் நன்றி கூறினார்.
இதில் மத்திய தபால்துறை, வெளிநாட்டு வர்த்தகத்துறை அதிகாரிகள், பிளிப்காட் மற்றும் அமேசான் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.