ADDED : ஜூலை 20, 2025 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : விவேக பாரதி அறக்கட்டளை சார்பில், பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப் பள்ளியில் 'நான்மணிக்கடிகை பேசும் நயம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
பள்ளி தாளாளர் ராஜராஜன் வரவேற்றார். பள்ளி தலைவர் இருதயமேரி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நீலம் அருள்செல்வி வாழ்த்தி பேசினார்.இணை இயக்குனர் லட்சுமி நரசிம்மன் நோக்கவுரையாற்றி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.மணப்பாறை ஆதவன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கல்வி இயக்குனர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.
ஏற்பாடுகளை விவேக பாரதி நிறுவனர்ரமேஷ் செய்திருந்தார்.விவேக பாரதி அறக்கட்டளை சார்பில், சிறப்பு விருந்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.