/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி கருத்தரங்கம்
/
குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி கருத்தரங்கம்
குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி கருத்தரங்கம்
குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி கருத்தரங்கம்
ADDED : ஜூன் 17, 2025 11:31 PM

அரியாங்குப்பம்: குழந்தைகளின் அடிப்படை பாதுகாப்பு சட்டங்கள் குறித்து, அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் இந்திய அரசின் சட்டம் நீதித்துறை, புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி மற்றும் நியாய ஒளி திட்டம் சார்பில், விழிப்புணர்வு கருத்தரங்கு, நேற்று நடந்தது.
அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் சீனுவாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பாஸ்கர் எம்.எல்.ஏ., சிறப்புரை நிகழ்த்தினார். உதவி பேராசிரியர் விஜயன், வழக்கறிஞர் ரீனா ஐஸ்வர்யா ஆகியோர், குழந்தைகளின் அடிப்படை பாதுகாப்பு சட்டங்கள், பற்றியும், பாலியல் சட்டங்கள், பாலியல் ரீதியாக குழந்தைகள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது பற்றி, அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள், சட்ட கல்லுாரி, மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவராமன் நன்றி கூறினார்.