தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/‘தமிழ் காமிக்ஸ் – காட்சிப் பண்பாடு’ பிரெஞ்சு நிறுவனத்தில் கருத்தரங்கம்

‘தமிழ் காமிக்ஸ் – காட்சிப் பண்பாடு’ பிரெஞ்சு நிறுவனத்தில் கருத்தரங்கம்

‘தமிழ் காமிக்ஸ் – காட்சிப் பண்பாடு’ பிரெஞ்சு நிறுவனத்தில் கருத்தரங்கம்


UPDATED : அக் 27, 2026 07:18 PM

ADDED : அக் 27, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 07:18 PM ADDED : அக் 27, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தில் ‘தமிழ் காமிக்ஸ் மற்றும் காட்சிப் பண்பாடு’ குறித்த கருத்தரங்கம் நடந்தது.

இந்நிகழ்வை, எழுத்தாளர் கண்ணன் முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைத்து வழி நடத்தினார். வகம் காமிக்ஸ் பதிப்பாளர் கலீல், முனைவர் பிரபாவதி, சித்திரக் கதைக் கலைஞர் செந்தில்செல்வம் ஆகியோர் கள அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

தமிழ் சித்திரக் கதைகளின் வரலாற்றுச் சிறப்புகள், பதிப்புத்துறை சவால்கள் மற்றும் அதன் எதிர்கால சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முனைவர் பிரபாவதி பேசுகையில், ‘1950 தொடக்கக் காலச் சிறுவர் இதழ்கள் முதல் 'முத்து காமிக்ஸ்', 'லயன் காமிக்ஸ்' வரையிலான தமிழ் சித்திரக் கதைகள் சமூக பண்பாட்டு மாற்றங்களைப் பிரதிபலிக்கும் முதன்மை ஆவணமாகத் திகழ்கின்றன. இவற்றை இலக்கியப் படைப்புகளாகக் கருதி ஆய்வு செய்ய வேண்டும்’ என்றார்.

வகம் காமிக்ஸ் பதிப்பாளர் கலீல் பேசுகையில், தற்போதைய டிஜிட்டல் சூழலில் அச்சுப் பதிப்பகத்தை நடத்திச் செல்வதில் உள்ள சவால்கள், சர்வதேச சித்திரக் கதைகளின் தமிழாக்கங்கள் மற்றும் புதிய தலைமுறைப் படைப்பாளர்களை உருவாக்குவது குறித்து விளக்கிய, அழிவின் விளிம்பில் உள்ள இத்துறையை அரசின் முயற்சியோடு காப்பாற்ற வேண்டும்’ என்றார்.

செந்தில் செல்வம் பேசுகையில், ‘1950 முதல் முன்னோடித் தமிழ் சித்திரக் கலைஞர்களின் பங்களிப்புகளை முறைப்படி ஆவணப்படுத்தவும், அரிதான பழைய காமிக்ஸ் இதழ்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

இந்நிகழ்வில், 1950 முதல் பிரசுரிக்கப்பட்ட அரிய காமிக்ஸ் நுால்களின் கண்காட்சி பார்வையர்கள் மற்றும் வாசகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், மாணவர்கள் மற்றும் காட்சிப் பதிவுக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us