விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த தடை: பள்ளி கல்வி இயக்ககம் உத்தரவு
விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த தடை: பள்ளி கல்வி இயக்ககம் உத்தரவு
UPDATED : அக் 27, 2026 07:18 PM
ADDED : அக் 27, 2026 07:16 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த தடை விதித்து பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை பள்ளிக் கல்வி இயக்கம் உயர்நிலை பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளிகளுக்கு அரசு மற்றும் கல்வி இயக்ககத்தால் அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவித்த பிறகு, எந்தவொரு வகுப்புகளும் நடத்தப்படக் கூடாது என, அனைத்து பள்ளித் தலைமைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் மாணவர்கள் சீருடையிலோ அல்லது வண்ண உடைகளிலோ பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தவோ அழைக்கவோ கூடாது.
இந்த உத்தரவுகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைவர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
