தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., சீட் கேட்டு சென்டாக் அலுவலகம் முற்றுகை

மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., சீட் கேட்டு சென்டாக் அலுவலகம் முற்றுகை

மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., சீட் கேட்டு சென்டாக் அலுவலகம் முற்றுகை


ADDED : அக் 18, 2024 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவி ஒருவருக்கு எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்க வலியுறுத்தி 'சென்டாக்' அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கருவடிக்குப்பம், காமராஜர் மணிமண்டபத்தில் இயங்கி வரும் சென்டாக் அலுவலகத்தை நேற்று காலை 10:00 மணிக்கு, பல்வேறு சமூக அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன.

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், 'புதுச்சேரியை சேர்ந்த ஆதிதிராவிட மாணவி ஒருவர் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு, சென்டாக்கில் விண்ணப்பித்தார். அவருக்கு, சாதி சான்றிதழ் வழங்குவதில், வருவாய்த்துறை சார்பில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் மாணவிக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதில் அரசு தலையிட்டு மாணவிக்கு, சீட் ஒதுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இது குறித்து, 'சென்டாக்' அலுவலக அதிகாரிகள், அரசு செயலரிடம் முறையிட அறிவுறுத்தி உள்ளனர். இதில் கவர்னர், முதல்வர் தலையிட்டு மாணவிக்கு 'சீட்' கிடைக்க வழி செய்ய வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us