ADDED : ஆக 20, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உலக மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி, இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது.
உலகம் முழுவதும் ஒவ்வொறு ஆண்டும், ஆகஸ்ட் 21ம் தேதி உலக மூத்த குடிமக்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதையடுத்து, புதுச்சேரி மூத்த முடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில் மூத்த குடிமக்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
சாரதாம்பாள் நகரில் உள்ள செயின்ட் பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் மற்றும் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில், மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்க தலைவர் வேணுகோபால் உட்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
