தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் கைது


ADDED : ஆக 20, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுாரில் நகராட்சி ஊழியரை தாக்கி பணம் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த முரளி,57; இவர் புதுச்சேரி நகராட்சியில் ஊழியராக வேலை செய்துவருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஆரியப்பாளையம் சாராயக்கடை சாலையில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற முரளியை,  ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் சுரேந்தர்,25; வழிமறித்து தாக்கி, முரளி வைத்திருந்த 600 ரொக்க பணம் மற்றும் ஒரு மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.

முரளி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் சுரேந்தர் மீது  போலீசார் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us