தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜனநாயகக் கடமையில் சளைக்காத மூத்த குடிமக்கள்

ஜனநாயகக் கடமையில் சளைக்காத மூத்த குடிமக்கள்

ஜனநாயகக் கடமையில் சளைக்காத மூத்த குடிமக்கள்


UPDATED : அக் 06, 2026 11:32 PM

ADDED : அக் 06, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:32 PM ADDED : அக் 06, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஓட்டுப்பதிவின் போது, மூத்த குடிமக்கள் பலரும் தங்கள் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் சக்கர நாற்காலிகளில் வந்து ஓட்டளித்தனர்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் ஓட்டுபதிவு விறுவிறுப்பாக நேற்று நடந்த நிலையில், தளர்ந்த வயதிலும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உயர்த்தும் வகையில் முதியவர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். வயது முதிர்வு மற்றும் பல்வேறு உடல் உபாதைகளால் நடக்க இயலாத நிலையிலும், தங்களது ஓட்டுரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற உறுதியோடு அவர்கள் ஓட்டுச்சாவடிகளை அடைந்தனர்.

ஓட்டுச்சாவடிகளுக்கு வந்த முதியவர்களின் வசதிக்காகப் புதுச்சேரி தேர்தல் ஆணையம் சார்பில், சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தன்னார்வலர்கள் முதியவர்களைச் சக்கர நாற்காலிகளில் அமர வைத்து, மிகுந்த கனிவோடு ஓட்டுபதிவு இயந்திரம் வரை அழைத்துச் சென்றனர்.

மூத்த குடிமக்கள் நீண்ட நேரம் காத்திராமல் சிரமமின்றி ஓட்டளித்துச் செல்லத் தனி வரிசை வசதியும், சிறப்பு முன்னுரிமையும் வழங்கப்பட்டன. உடல்நலக் குறைவையும் தாண்டி, தளர்வில்லாத மனதுடன் வந்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்களின் இந்த செயல், அப்பகுதியில் இருந்த இளைய தலைமுறை வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களிடையே பெரும் வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமை ஆற்றிய மூத்த குடிமக்களை தேர்தல் அதிகாரிகள் பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us