/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் பண்டிகைக்கு பிறகு 'ஹெல்மெட்' தீவிரப்படுத்தப்படும் சீனியர் எஸ்.பி., தகவல்

ADDED : ஜன 13, 2025 06:14 AM
புதுச்சேரி : பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்படும் என சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி கூறினார்.
கருவடிக்குப்பம் அருகே ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி சீனியர் எஸ்.பி.,பிரவீன்குமார் திரிபாதி கூறியதாவது;
இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. பொங்கல் பண்டிகை என்பதால் சில நாட்களுக்கு ஹெல்மெட் சோதனை கெடுபிடி குறைவாக இருக்கும்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதுச்சேரி - கடலுார் சாலை, புதுச்சேரி - விழுப்புரம் சாலை, புறவழிச்சாலைகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும். இந்த நடவடிக்கையால் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் குறையும். ஹெல்மெட் அணிவதை யாரும் தவிர்க்க கூடாது.
மனித உயிர்களை காப்பாதற்காக தான் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட் டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, சென்னை போன்ற பெரு நகரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது போல், புதுச்சேரி மக்கள் ஹெல்மெட் அணிவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் அந்த குடும்பமே முற்றிலுமாக பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்' என்றார்.