sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கு தனி சிறை

/

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கு தனி சிறை

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கு தனி சிறை

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கு தனி சிறை


ADDED : மார் 09, 2024 03:00 AM

Google News

ADDED : மார் 09, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி தனது வீட்டின் அருகில் விளையாடியபோது மாயமானார். சிறுமி குறித்த தகவல் கிடைக்காததால், பெற்றோர் சோலை நகர் போலீசில் புகார் அளித்தனர். 3 நாட்களாக போலீசார் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

5ம் தேதி மதியம் சிறுமியின் உடல் கழிவுநீர் வாய்க்காலில் கை கால் கட்டிய நிலையில் மிதந்தது. பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியை சீரழித்து கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ், 19; விவேகானந்தன், 57; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றால், இருவர் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்துவர் என்பதால் காலாப்பட்டு சிறைக்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறுமி கொலை வழக்கு விசாரணையை சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு நேற்று முன்தினம் துவக்கியது. கொலை சம்பவம் நடந்த இடத்தை சிறப்பு குழு நேரில் சென்று ஆய்வு செய்து சில தடயங்களை சேகரித்தது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், விவேகானந்தன் இருவரையும் மற்ற விசாரணை கைதிகளுடன் அடைத்தால், பிரச்னை எழும் என்பதால் தனி சிறை அறையில் அடைக்க போலீசார் சிறைத்துறைக்கு கடிதம் எழுதினர்.

அதை ஏற்று கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் விசாரணை கைதிகள் யார்டில், தனி சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us