ADDED : அக் 14, 2024 08:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: mமருத்துவ துறையில் எதிர்நோக்கும் சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை மற்றும் நிதி நிறுவனங்கள் சார்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.
சங்க பொது செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
தலைவர் சுதாகர் வரவேற்றார்.
தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வில், டாக்டர்கள் செங்குட்டுவன், செந்தில்குமார் ஆகியோர் கலந்துரையடினர்.
மருத்துவ துறையில் எதிர்நோக்கும் சட்ட நடைமுறைகள், மருத்துவர் - நோயாளிகள் உறவுகள் , நிதி சார்ந்த மருத்துவ காப்பீடு, நடைமுறையில் உள்ள காப்பீடு முதலிடு குறித்து விளக்கப்பட்டது. நிதி சார்ந்த வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.