தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொடர் மருத்துவ கருத்தரங்கு

தொடர் மருத்துவ கருத்தரங்கு

தொடர் மருத்துவ கருத்தரங்கு


UPDATED : அக் 14, 2026 07:29 PM

ADDED : அக் 14, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:29 PM ADDED : அக் 14, 2026 07:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் உலக மனநல தினத்தையொட்டி மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவக் கருத்தரங்கு நடந்தது.

மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கி, கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஜிப்மர் மருத்துவமனையின் மனநல மருத்துவர் ரவி பிலிப் ராஜ்குமார் பங்கேற்று, மனநல பாதிப்பு எவ்வாறு உடல் நல பாதிப்பாக வெளிப்படுகிறது என விளக்கம் அளித்தார்.

கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி பிரதாப் வசிகர், குறைதீர் அதிகாரி ரவி, மனநல மருத்துவர் பொன்மணி பாலன் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவ கருத்தரங்கில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us