UPDATED : அக் 14, 2026 07:35 PM
ADDED : அக் 14, 2026 07:26 PM
அ நிறம் | அளவு
விபத்தில் மூதாட்டி காயம்: கடலுார் அடுத்த கோண்டூர் பணங்காடு பகுதியை சேர்ந்தவர் அஞ்சாபுலி மனைவி ராணி, 7. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கினார். . அதிகாலை அவரது குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, ராணியை காணவில்லை.
இதனிடையே, நேற்று அதிகாலை விழுப்புரம் – நாகப்பட்டினம் புறவழிச்சாலை குருவிநத்தத்தில் சாலையை கடக்க முயன்ற ராணி மீது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
