ADDED : அக் 01, 2026 05:02 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு நேற்று சேவை சாற்றுமுறை நடந்தது.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ண நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 758ம் ஆண்டு நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் துவங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி,நேற்று காலை 8:30 மணிக்கு சேவை சாற்று முறை, இரவு தேசிகன் புறப்பாடு நடந்தது. வரும் 2ம் தேதி இரவு சுவாமி தேசிகன் ஊஞ்சல் உற்சவம், 3ம் தேதி இரவு பானக பூஜை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மங்கள இசை மற்றும் இசைக் கச்சேரி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமபத்திரன், சம்பத்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
