தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுற்றுலா படகு ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் போராட்டம்

 சுற்றுலா படகு ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் போராட்டம்

 சுற்றுலா படகு ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் போராட்டம்


ADDED : அக் 01, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை பகுதியில் நடக்கும் படகு சவாரி குறித்து தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவாவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வம்பாகீரப்பாளையம் சுற்றுலா படகு ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோனாம்பாளையம் சா லை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்களது தொழில் மற்றும் மீனவர் சமூகத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதுள்ளதாக கூறி, அமைப்பாளர் சிவாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில், பங்கேற்ற தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பேசுகையில், அரசிடம் முறையாக உரிமம் பெற்று சுற்றுலா படகு சவாரி தொழில் செய்து வருகின்றனர். உரிமம் இல்லாமல் யாராவது படகு இயக்கினால், அதை கண்காணிக்க வேண்டிய துறைகள் இருக்கின்றன. அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும்.

அதைவிடுத்து, மீனவர்களின் தொழிலை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது. மீனவர்கள் குறித்து யார் தவறாக பேசினாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக யாரையும் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டி பேசக்கூடாது. எந்த விஷயமாக இருந்தாலும் உண்மை நிலையை தெரிந்துகொண்டு பேச வேண்டும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us