தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஏழைகளுக்கு செய்கின்ற சேவை இறைவனுக்கு செய்கின்ற சேவை: முதல்வர் ரங்கசாமி பேச்சு

ஏழைகளுக்கு செய்கின்ற சேவை இறைவனுக்கு செய்கின்ற சேவை: முதல்வர் ரங்கசாமி பேச்சு

ஏழைகளுக்கு செய்கின்ற சேவை இறைவனுக்கு செய்கின்ற சேவை: முதல்வர் ரங்கசாமி பேச்சு


UPDATED : அக் 10, 2026 08:50 PM

ADDED : அக் 10, 2026 08:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 08:50 PM ADDED : அக் 10, 2026 08:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வது, இறைவருக்கு செய்கின்ற சேவை என முதல்வர் ரங்கசாமி பேசினார்.

சென்னை ராமகிருஷ்ண மடத்தில் புதுச்சேரி கிளையின், சேவை பணிகள் கட்டடத்தை திறந்து வைத்து முதல்வர் ரங்கசாமி பேசியவதாவது:

ராமகிருஷ்ண மடத்தின் புதுச்சேரி கிளை சேவை பணிகள் கட்டடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி. புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும், சித்தர்கள் வாழ்கின்ற பூமி. அதனால் தான் புதுச்சேரி செழிப்பாக இருக்கிறது.

கடவுள் நம்பிக்கை இருந்தால், அனைத்தும் கிடைக்கும். ராமகிருஷ்ண மடத்தின் முக்கிய நோக்கம் இறை நம்பிக்கையை வளர்ப்பது. அடுத்து மக்களுக்கு சேவை செய்வது.

ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வது என்பது இறைவனுக்கு செய்கின்ற பணி. அப்பா பைத்திய சுவாமி என் தலையில் கை வைத்து விபூதி வைத்த பிறகு எப்படி இருக்கனும்னு எனக்கு தெரிந்தது.

இறை நம்பிக்கை உள்ளவர்களால் தான் சேவை செய்ய முடியும். மடத்தின் கிளையை இங்கு திறந்திருப்பது மகிழ்ச்சி கொடுக்ககூடிய ஒன்று. மடத்ததை இங்கு கட்ட ஆணைகள் கொடுக்கும் போது இருந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டது.

ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்கின்றன மையம் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திருக்கோவில் மூலம் இறைநம்பிக்கை ஏற்பட்டு இங்கே வழிபாடு, பூஜை செய்வது, நம் ஆன்மிக பூமியில் மேலும் இறை நம்பிக்கை ஊட்டக்கூடியதாக இந்த மடம் அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us