/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் நீதிமன்றத்தில் 20 வழக்குகளுக்கு தீர்வு
/
மக்கள் நீதிமன்றத்தில் 20 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : பிப் 18, 2024 05:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் நீதிமன்றத்தில்,20 வழக்குகளில் 1,59,150 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் 'மக்கள் நீதிமன்றம்', தலைவர் முத்துவேல் தலைமையில், உறுப்பினர்கள் ஆறுமுகம் மற்றும் சுவிதா ஆகியோரை கொண்டு ஏற்படுத்தப்பட்டது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில், மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் இருந்து, 36க்கும் மேற்பட்ட வழக்குகள் கண்டறியப்பட்டு, பேச்சு வார்த்தைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், 20 வழக்குகளில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 150 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
நிகழ்ச்சியில், புதுச்சேரி அரசு சட்டத்துறை செயலர் கேசவன், பயனாளிகளுக்கு காசோலைகள் மற்றும் உத்தரவு நகல்களை வழங்கினார். சட்டத்துறை துணை செயலர் ஜான்சி, மாநில நுகர்வோர் குறை தீர்வுஆணைய உறுப்பினர்கள் சுந்தர வடிவேல், உமா சங்கரி வாழ்த்துரை வழங்கினர்.
வக்கீல்கள் இளஞ்செழியன், தயாவதி, ராஜ பிரகாஷ், தேவேந்திரன், காமாட்சி, முரளி, பிரபாகரன், செல்வம், கலைச்செல்வம், சட்டக்கல்லுாரி மாணவர்கள், வழக்காளிகள், காப்பீட்டு நிறுவன தொழிலாளர் வைப்பீட்டு நிதி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை நுகர்வோர் குறை தீர்வு ஆணைய பதிவாளர் விஜயா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.